இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு |

யு-டியூப்பர், இன்ஸ்டா பிரபலமான இலக்கியா நேற்று தற்கொலை முயற்சி செய்துள்ளார். அளவுக்கு அதிகமான மது அருந்தி விட்டு, கூடுதலாக ஊட்டச்சத்து மாத்திரை போட்டுவிட்டு 'பைட் மாஸ்டர் திலிப் சுப்பராயன் மீது குற்றம் சாட்டியுள்ளார். அதில் அவருடன் 6 ஆண்டுகளாக நட்பில் இருக்கிறேன். அடி உதை அனுபவிக்கிறேன். என அவர் மீது குற்றம் சாட்டியுள்ளாார். அவரின் இன்ஸ்டா பதிவுகளை பார்த்தவர்கள் வீடு தேடி சென்று போதையில் இருந்தவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறார்கள். சில மணி நேரத்தில் தனது குற்றச்சாட்டு பதிவுகளை நீக்கிவிட்டு, ‛ஆல் ஆர் பேக் நியூஸ்' என்று மாற்றியுள்ளார் இலக்கியா.
பிரபல பைட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் மகன் திலிப் சுப்பராயன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி பைட் மாஸ்டர். அவருக்கும் கவர்ச்சியாக வீடியோ போடும் இலக்கியாவுக்கும் என்ன தொடர்பு என விசாரித்தால், சில ஆண்டுகளுக்கு முன்பு படம் தயாரித்தார் திலிப். அப்போது சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருந்தார் இலக்கியா. ஜாம்பி, நீ சுடத்தான் வந்தியா போன்ற படங்களில் நடித்தார். அப்போது முதல் நட்பாகி இருக்கிறார்கள். ஆனாலும், சில ஆண்டுகளில் இருவருக்கும் இடையே பிரச்னை என்று கூறப்படுகிறது. ஆனாலும் திலிப்பை மிரட்டும் வகையில் இப்படி இலக்கியா முடிவெடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
திலிப் மறுப்பு
இதனிடையே திலிப் வெளியிட்ட அறிக்கையில், ‛‛எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பு இல்லை. சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்படி கிளப்பிடுகிறார்கள். நான் சட்டப்படி இதை சந்திப்பேன், சில நாட்களுக்கு முன்பு வேட்டுவம் படத்தில் ஏற்பட்ட உயிரிழப்பால் சோகத்தில் இருக்கிறேன். நான்தான் அங்கே பைட் மாஸ்டர்' என திலிப் புலம்பி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
இப்போது சமரசம் நடக்கிறது. இலக்கியாவை பணம் கொடுத்து சரிகட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. கவர்ச்சி வீடியோகளை வெளியிட்டு, அடிக்கடி வெளிநாடு டூர் போய் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார் இலக்கியா. அவரிடம் எப்படி இவ்வளவு பணம் சேர்ந்தது? இப்படி மற்றவர்களை மிரட்டினாரா? பணம் பறித்தாரா என விசாரிக்க வேண்டும் என்றும் ஒரு தரப்பு சொல்கிறது.