கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
மலையாள திரையுலகில் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக பிரபலமான நடிகராக நடித்து வருபவர் நடிகர் சுரேஷ்கோபி. மம்முட்டி, மோகன்லாலுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் இவர் மலையாளத்தையும் தாண்டி நேரடி தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் கோகுல் சுரேஷ் மற்றும் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.
இவரது மூத்த மகள் பாக்யா சுரேஷ் இங்கிலாந்தில் உள்ள கொலம்பியா யுனிவர்சிட்டியில் படித்து வந்தார். இந்தநிலையில் யுபிசிசவுடர் ஸ்கூல் ஆப் பிசினஸ் என்கிற பிரிவில் அவர் தற்போது பட்டம் பெற்றுள்ளார். கேரள பாரம்பரிய உடையான சேலை அணிந்து அவர் அங்கு பட்டம் பெற்றுக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.