Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கைவிட்ட பவன் கல்யாண் ? : விரக்தியில் வீரமல்லு இயக்குனர்

05 மே, 2023 - 16:34 IST
எழுத்தின் அளவு:
Did-Pawan-kalyan-Hari-hara-veera-mallu-movie-dropped

தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வரலாற்று படமாக அறிவிக்கப்பட்ட ஹரிஹர வீரமல்லு படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019லேயே துவங்கியது. பிரபல இயக்குனர் கிரிஷ் ஜஹர்லமுடி இந்த படத்தை இயக்கி வந்தார். இந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் தடைப்பட்டு நின்றது. ஏற்கனவே 50 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், கொரோனா அலை ஓய்ந்த பின், மீண்டும் சில நாட்கள் மட்டும் இந்த படத்தில் நடித்த பவன் கல்யாண் அதைத்தொடர்ந்து இந்த படத்தை கண்டு கொள்ளாமல் வேறு படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் இந்த படத்திற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட வக்கீல் சாப், பீம்லா நாயக் ஆகிய படங்கள் கடந்த இரண்டு வருடங்களில் அடுத்தடுத்து வெளியாகி விட்டன. இதைத்தொடர்ந்து இந்த வருடம் துவங்கப்பட்ட சமுத்திரக்கனியின் வினோதய சித்தம் பட ரீமேக்கையும் பவன் கல்யாண் முடித்துவிட்டார். இன்னொரு பக்கம் சுஜித் இயக்கத்தில் உருவாகி வரும் ஓ ஜி மற்றும் ஹரிஷ்சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் உஸ்தாத் பகத்சிங் ஆகிய படங்களுக்கு மாறி மாறி கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார்.

ஆனால் ஹரிஹர வீரமல்லு படத்தின் பக்கம் மட்டும் கவனத்தைத் திருப்ப மறுக்கிறாராம் பவன் கல்யாண். இந்த படத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஏ.எம் ரத்னம் தயாரித்து வருகிறார். இந்த படம் மேற்கொண்டு வளருமா என்கிற சந்தேக சூழல் நிழவுவதால் விரக்தியில் இருக்கிறாராம் இந்த படத்தில் இயக்குனர் கிரிஷ் ஜஹர்லமுடி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்ரீ லீலா கால்ஷீட் விஷயத்தில் உஷாரான தயாரிப்பாளர்கள்ஸ்ரீ லீலா கால்ஷீட் விஷயத்தில் ... ‛அவரைப்பற்றி பேசுவது டைம் வேஸ்ட்'; நாகசைதன்யாவை கடுப்படித்த இயக்குனர் ‛அவரைப்பற்றி பேசுவது டைம் வேஸ்ட்'; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in