துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தெலுங்கு திரை உலகையும் தாண்டி பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா இருவரும் ஹிந்தி மற்றும் தமிழில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த கேப்பில் அறிமுக நடிகை ஸ்ரீ லீலா தற்போது ரசிகர்கள் மத்தியில் புது கவனம் பெற்றுள்ளார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். இத்தனைக்கும் இவரது நடிப்பில் பெல்லி சந்தடி மற்றும் தமாக்கா என இரண்டே படங்கள் தான் வெளியாகி உள்ளன. ஆனால் தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீ லீலா. சமீபத்தில் கூட விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதற்கு முன்னதாக அவர் மகேஷ்பாபு, பவன் கல்யாண் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் ராம் பொத்தினி, நவீன் பாலி ஷெட்டி மற்றும் நிதின் ஆகியோருக்கு ஜோடியாகவும், பாலகிருஷ்ணா படத்தில் அவரது மகளாகவும் என ஆறு படங்களில் மாறி மாறி கால்ஷீட் ஒதுக்கி நடித்து வருகிறார். ஏதோ சில காரணங்களால் இதில் எந்த ஒரு படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனாலோ அல்லது மாற்றி வைக்கப்பட்டாலோ அடுத்ததாக ஸ்ரீ லீலாவின் தேதிகளை பெறுவது கடினம் என்பதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை தாமதம் இல்லாமல் முடித்து விடுமாறு இயக்குனர்களுக்கு தயாரிப்பாளர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்களாம். அதற்கேற்றபடி ஸ்ரீ லீலாவும் இப்போது வரை தான் ஒப்புக்கொண்ட படங்களில் கால்ஷீட் குளறுபடி இல்லாமல் நடித்து வருகிறாராம்.