அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
மலையாள திரை உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஷேன் நிகம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெயில் என்கிற படத்தில் அதிக சம்பளம் கேட்டு தயாரிப்பாளருடன் ஏற்பட்ட ஈகோ மோதலில் அந்த படம் முடிவடைவதற்கு முன்பாகவே அதில் நீண்ட தலைமுடியுடன் இருந்த தனது கெட்டப்பை மாற்றும் விதமாக முடியை வெட்டி அதிர்ச்சி அளித்தார் ஷேன் நிகம். இதைத் தொடர்ந்து அந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்து ஷேன் நிகமுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போடும் அளவுக்கு நிலைமை சீரியஸ் ஆனது.
இதனால் தமிழில் ஒரு சில பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் இழந்தார் ஷேன் நிகம். இதைத் தொடர்ந்து தயாரிப்பாளருடன் ஏற்பட்ட சமரசம் காரணமாக அந்த வெயில் படத்தை நடித்து முடித்து கொடுத்த ஷேன் நிகம், கடந்த இரண்டு வருடமாக நல்ல பிள்ளையாக நடித்து வருகிறார். அந்த வகையில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள கொரோனா பேப்பர்ஸ் என்கிற படத்தில் இவர் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது ஆர்டிஎக்ஸ் என்கிற படத்தில் இரண்டு கதாநாயகர்களின் ஒருவராக நடித்து வரும் ஷேன் நிகம் திடீரென அந்த படத்தின் படப்பிடிப்பை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிய நிகழ்வு மலையாள திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படப்பிடிப்பின்போது சீனியர் நடிகர்களான லால், பாபு ஆண்டனி உள்ளிட்ட சில நடிகர்களுடன் ஷேன் நிகம் இணைந்து நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டு வந்தது. அப்போது திடீரென நள்ளிரவு 11 மணிக்கு மேல் யாரிடமும் சொல்லாமல் கோபத்துடன் ஷேன் நிகம் படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறியதாக சொல்லப்படுகிறது.
மீண்டும் ஒரு ஈகோ மோதலா, இதன் பின்னணியில் நடந்தது என்ன என்பது குறித்து இன்னும் முழு விபரங்கள் எதுவும் தெரியவில்லை. இவருடன் இணைந்து நடிக்கும் இன்னொரு இளம் நடிகரான ஆண்டனி வர்கீஸ் அன்றைய தேதியில் படப்பிடிப்பு அவருக்கு இல்லாவிட்டாலும், இதை கேள்விப்பட்டு இந்த ட்ராமா எல்லாம் ரொம்ப ஓவர் என்று சோசியல் மீடியாவில் எனது கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளார்.