சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
தெலுங்கு இளம் முன்னணி நடிகர் ராம்சரண் தற்போது தனது திரையுலக பயணத்தில் மிக முக்கியமான சந்தோஷ தருணத்தில் இருக்கிறார். ஒரு பக்கம் அவர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் சமீபத்தில் ஆஸ்கர் விருதை அள்ளி வந்து விட்டது. இன்னொரு பக்கம் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது 38வது வயதில் தற்போது அடி எடுத்து வைத்துள்ளார் ராம்சரண். இந்த பிறந்தநாளையும் ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் விருது வென்ற மகிழ்ச்சியையும் ஒன்று சேர கொண்டாடுவது போல தெலுங்கு திரை உலகை சேர்ந்த பலரும் ராம்சரணின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
குறிப்பாக இயக்குனர் ராஜமவுலி, இசையமைப்பாளர் மரகதமணி உள்ளிட்ட ஆர்ஆர்ஆர் பட குழுவினர் பெரும்பாலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.. அதேசமயம் இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக நடித்த ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பு சமயத்திலிருந்து, ஆஸ்கர் விருது நிகழ்ச்சிக்கான புரமோஷன் வரை நகமும் சதையுமாக பழகிய ஜூனியர் என்டிஆர் கலந்து கொள்ளாதது திரையுலக வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் ஜூனியர் என்டிஆரும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ராம்சரணுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு நின்றுவிட்டார்.
ஆர்ஆர்ஆர் படத்திற்கு முன்னதாக இவர்கள் இருவரது குடும்பத்திற்கும் நிலவி வந்த ஒரு பகைமை தோற்றம் காரணமாக இருவரும் நெருங்கி பழகவில்லை என்பது உண்மை. ஆர்ஆர்ஆர் படத்திற்கு பின்னர் தான் இவர்கள் நட்பானார்கள். ஆனால் சமீபத்தில் நடந்த ஆஸ்கர் புரமோஷன் நிகழ்ச்சிகள் மற்றும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நிகழ்வு உள்ளிட்டவற்றில் ராம் சரண் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டு பாராட்டுக்களையும் புகழையும் அவர் மட்டுமே சொந்தமாக்கிக் கொண்டார் என்று ஜூனியர் என்டிஆர் கருதுகிறார் என்றும், அதனால் தான் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்து விட்டார் என்றும் சொல்லப்படுகிறது. அதேசமயம் ராம்சரனின் பிறந்தநாள் அன்றுதான் ஜூனியர் என்.டி.ஆரின் மனைவி லட்சுமி பிரணதியின் பிறந்தநாளும் என்பதால் அவர் ராம்சரணின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும் இன்னொரு தரப்பினர் கூறுகின்றனர்.
அதேபோல சிரஞ்சீவி வீட்டில் நடைபெறும் சாதாரண விசேஷங்களில் கூட முதல் ஆளாக பங்கெடுத்துக் கொள்ளும் உறவுக்காரரான அல்லு அர்ஜுன் ராம்சரணின் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சிலர் அவர் புஷ்பா 2 படபாதிப்பில் பிஸியாக இருப்பதால் வரவில்லை என்று கூறினாலும், அந்த படத்தின் இயக்குனர் சுகுமாரே ராம்சரண் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.