''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கடந்தாண்டு கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் அந்த படம் வெளியான சில நாட்களிலேயே படத்தில் இடம்பெற்ற வராஹரூபம் என்கிற பாடல் ஏற்கனவே மலையாளத்தில் பிரபலமாக விளங்கும் தாய்க்குடம் பிரிட்ஜ் என்கிற இசைக்குழு உருவாக்கிய நவரசம் என்கிற பாடலின் காப்பியாக உருவாகி இருந்தது என்கிற சர்ச்சை கிளம்பியது. அதை காந்தாரா பட இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத் மறுத்தார்.
இதைத் தொடர்ந்து தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு காப்பிரைட் உரிமை மீறல் என்கிற அடிப்படையில் காந்தாரா பட இயக்குனர் ரிஷப் ஷெட்டி மற்றும் பட தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு கூட இந்த வழக்கு தொடர்பாக இவர்கள் இருவருமே கோழிக்கோடு காவல் நிலையத்தில் போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளித்தனர். இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த பிரபல செய்தி நிறுவனம் ஒன்று, இந்த வழக்கில் இந்த படத்தை கேரளாவில் வெளியிட்ட நடிகர் பிரித்விராஜையும் தொடர்புபடுத்தி காவல் துறையில் புகார் அளித்ததன் பேரில் பிரித்விராஜ் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
ஆனால் இந்த எப்ஐஆர்-ஐ தள்ளுபடி செய்ய வேண்டும் என பிரித்விராஜ் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் பிரித்விராஜ் மீது தொடரப்பட்ட எப்ஐஆர- ஐ தள்ளுபடி செய்தது. மேலும் இதுபற்றி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் பிரித்விராஜை பொறுத்தவரை அவர் காந்தாரா படத்தை கேரளாவில் வெளியிட்ட ஒரு விநியோகஸ்தர் மட்டுமே.. அவருக்கும் இந்த காப்பிரைட் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை தேவையில்லாமல் இந்த வழக்கிற்குள் இழுத்துள்ளது நன்றாகவே தெரிகிறது. இது வழக்கை நீண்ட நாட்களுக்கு இழுத்துக்கொண்டே தான் செல்லும் என்று வழக்கு தொடர்ந்தவர்களுக்கு எனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.