கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
துல்கர் சல்மான் தற்போது மலையாளத்தில் கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் கிங் ஆப் கோத என்கிற படத்தில் நடித்து வருகிறார். மலையாள திரையுலகின் பிரபல சீனியர் இயக்குனரான ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இந்த படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மலையாள இளம் முன்னணி நடிகர்களில் ஒருவரான டொவினோ தாமஸ் கிங் ஆப் கோத படப்பிடிப்பிற்கு விசிட் அடித்துள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
அதே சமயம் சில மாதங்களுக்கு முன்பு ஒரு முறை இதேபோல இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு வருகை தந்தார் டொவினோ தாமஸ். தற்போது மீண்டும் அவர் இந்த படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருப்பதை பார்க்கும்போது இந்த படத்தில் அவரும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரோ என்கிற யூகங்கள் சோசியல் மீடியாவில் கிளம்பியுள்ளன. ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான குறூப் என்கிற படத்திலும் சில நிமிடங்களே வந்து செல்லும் கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.