7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி | ஜப்பானில் 100 நாட்கள் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' | சுதந்திர போராளி கதாபாத்திரத்தில் புகழ் | திலீப் படத்தில் இணைந்த ஜீவா | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சூர்யா - பிரித்விராஜ் சந்திப்பு | யுடியூப் விமர்சகரை திட்டியது ஏன்? : உன்னி முகுந்தன் விளக்கம் | விறுவிறு போஸ்ட் புரொடக்சனில் மம்முட்டி ஜோதிகாவின் காதல் ; தி கோர் | செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தூக்கி எறிந்த ரன்பீர் கபூர் |
சில மாதங்களுக்கு முன்பு நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் கடுவா. ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவான இந்தப்படம் வெளியாகி 50 நாட்கள் கடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாடி உள்ளனர். இந்த படம் நிஜத்தில் வாழ்ந்த கடுவாக்குன்னால் குருவச்சன் என்பவரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருந்தது. இந்த நிலையில் இந்த வெற்றி விழாவின்போது பேசிய பிரித்விராஜ், இந்தப் படத்திற்கு இரண்டாம் பாகம் உண்டு என்றும், அது இந்த படத்தில் சீக்வல் ஆக இல்லாமல் ப்ரீக்வல் ஆக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
அதே சமயம் இந்த இரண்டாம் பாகத்தில் கடுவாக்குன்னல் குருவச்சனின் தந்தையான கொருத்து மாப்பிள்ள கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லால், மம்முட்டி அல்லது சுரேஷ்கோபி இவர்களில் யாராவது ஒருவர் சம்மதிக்க வேண்டும்.. அந்த கம்பீரமான கதாபாத்திரத்திற்கு இதில் யாரவது ஒருவர் இருந்தால் தான் இந்த படத்தின் இரண்டாம் பாகம் மேற்கொண்டு நகரும் என்றும் கூறியுள்ளார் பிரித்விராஜ்.. ரசிகர்கள் பலரும் மம்முட்டி அல்லது சுரேஷ்கோபி இருவரில் ஒருவர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.