'கல்கி 2898 ஏடி' படப்பிடிப்பில் கமல்ஹாசன் | சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் | அஜித் எடுத்த அதிரடி முடிவு | மீண்டும் போலீஸாக மிரட்ட வரும் விஜய் ஆண்டனி | ஓடிடி ரிலீஸ் : ஹிந்தி சினிமாவை பின்பற்றுமா தமிழ் சினிமா ? | மோகன்லால் - ஜீத்து ஜோசப்பின் நேரு ரிலீஸ் தேதி அறிவிப்பு | அதிக உணவுகளை சூர்யா ஆர்டர் பண்ணுவது ஏன்? ஜோதிகா வெளியிட்ட சுவாரசிய தகவல் | ஜெயம் ரவியின் ‛காதலிக்க நேரமில்லை' | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து : 'கமா' போட்ட சசிகுமார் | ரஜினி 171வது படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் - ஜீவன்? |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா படத்தின் முதல் பாக வெற்றியைத் தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுன் அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். புஷ்பா படத்தில் அவரது நடிப்பு, மேனரிசம் எல்லாமே தெலுங்கு மொழியை தாண்டி தென்னிந்தியா மட்டுமல்லாது வட இந்தியாவிலும் அவருக்கு மிகப்பெரிய புகழை சம்பாதித்து கொடுத்துள்ளது. இந்த நிலையில் தனது மனைவி சினேகாவின் பிறந்த நாளை முன்னிட்டு பொற்கோவில் சென்று தரிசனம் செய்துள்ளார் அல்லு அர்ஜுன்.
அதை தொடர்ந்து அங்கிருந்து அட்டாரி எல்லைப்பகுதிக்கு குடும்பத்துடன் சென்றார் அல்லு அர்ஜுன்.. அங்கு அவர்களை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளும் வீரர்களும் வரவேற்றனர். அவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள இடங்களை சுற்றி காட்டிய வீர்கள் அவரது மகன் சளைக்காமல் கேட்ட கேள்விகள் சந்தேகங்களுக்கு எல்லாம் பதில் அளித்தனர்.. அல்லு அர்ஜுன் அங்கே வந்ததை அறிந்து ரசிகர்கள் பலர் நூற்றுக்கணக்கில் கூடினர். அவர்களை பார்த்து கையசைத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் அல்லு அர்ஜுன்.