டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் | ‛ஹிருதயபூர்வம்' படத்தில் கெஸ்ட் ரோலில் மீரா ஜாஸ்மின் ; சென்சார் மூலம் உடைந்த ரகசியம் | வேண்டுமென்றே போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்கள் ; சுரேஷ்கோபி மகன் திடுக் தகவல் | மலையாளத்தில் சாண்டி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் ஆக.,28ல் ரிலீஸ் | தயாரிப்பாளர் மட்டுமல்ல, இயக்குனரும் ஆனார் ரவிமோகன் | கஞ்சா கடத்தும் காட்டீஸ் : சீலாவதியாக நடிக்கும் அனுஷ்கா | அடுத்த படம் எது? அல்லாடும் டாப் ஹீரோக்கள் | டைட்டில் இல்லாமலேயே முடிந்த விமல் படம் | யானை நடிக்கும் புதிய படம் ‛அழகர் யானை' | ஏஐ தொழில்நுட்பம் சினிமா கலைஞர்களை அழித்துவிடும்: அனுராக் காஷ்யப் எச்சரிக்கை |
துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கில் உருவாகி சமீபத்தில் வெளியான சீதா ராமம் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இந்தியில் அவர் நடிப்பில் வெளியான சுப் என்கிற படமும் பாசிடிவான விமர்சனங்களை பெற்றது. இந்தநிலையில் தனது கனவு படம் என துல்கர் சல்மான் ஏற்கனவே குறிப்பிட்ட 'கிங் ஆப் கோத' என்கிற படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு, அதில் தற்போது நடித்து வருகிறார் துல்கர் சல்மான். பிரபல மலையாள இயக்குனர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ராயபுரம் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்தப்படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷும் நடித்து வருகிறார். சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்ட குரூப் புகைப்படத்தில் இவரும் இடம் பெற்றிருந்ததும், அதே உடையுடன் துல்கருடன் தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் அவருக்கு கோகுல் பிறந்தநாள் வாழ்த்து சொன்னதும் இதை உறுதிப்படுத்துகிறது. இதற்கு முன்னதாக சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி, வரலட்சுமி நடிப்பில் வெளியான மாஸ்டர்பீஸ் என்கிற படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் கோகுல் சுரேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..