ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ சமீபத்தில் மரணம் அடைந்தார். இவர் நடிகர் பிரபாஸின் பெரியப்பா. பிரபாஸை சினிமாவுக்கு கொண்டு வந்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. கிருஷ்ணம் ராஜூ பிறந்த ஊரான கிழக்கு கோதாவரி மாவட்டம் மொகல்தூர் கிராமத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. இதில் பிரபாஸ் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் தனது பெரியப்பா பெயரில் அறக்கட்டளை தொடங்குவதாகவும், முதல் கட்டமாக அந்த அறக்கட்டளைக்கு 3 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் பிரபாஸ் அறிவித்தார். இந்த விழாவில் பங்கேற்க வந்த நடிகையும், ஆந்திர மாநில நகர்புற வளர்ச்சிதுறை வாரிய தலைவருமான ரோஜாவும் கலந்து கொண்டார். அவர், கிருஷ்ணம் ராஜு பிறந்த இந்த ஊரில் அரசு அவருக்கு நினைவிடம் கட்ட ஏற்பாடு செய்யும், இதற்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தரப்படும் என்று அறிவித்தார்.
இந்த நிகழ்வில் பிரபாஸ் ஒரு லட்சம் பேருக்கு விருந்து அளித்தார். பிரபாஸ் சொந்த கிராமத்திற்கு வந்ததை அறிந்து லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். போலீஸார் அவர்களை மிகவும் சிரமப்பட்டு கட்டுப்படுத்தினார்கள். வீட்டின் பால்கனியில் நின்று அவர் ரசிகர்களின் அன்பை ஏற்றுக் கொண்டார்.




