சசிகுமார் - சரத்குமாரின் 'நா நா' டிச., 15ல் ரிலீஸ் | அதிர்ஷ்டசாலியாக மாறிய மாதவன் | 'அனிமல்' முதல் நாள் வசூல் ரூ.116 கோடி என அறிவிப்பு | விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சலார்' டிரைலர் | மீனவர் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் | காதலியை கரம்பிடித்த குருவி தமிழ்செல்வன் | ‛மெட்டி ஒலி' தனத்தை ஞாபகம் இருக்கா? | சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்த விஜய் பட நடிகர் | ‛பப்லு' பிரித்விராஜை பிரிந்துவிட்டாரா ஷீத்தல்? |
தெலுங்கு திரையுலகின் சீனியர் நடிகரான மோகன்பாபுவின் மகள் நடிகை லட்சுமி மஞ்சு. இவர் ஒரு பக்கம் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் படங்களிலும் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜோதிகா நடித்த காற்றின் மொழி படத்தில் அவரது தோழியாக நடித்த லட்சுமி மஞ்சு, தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி உள்ள மான்ஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தெலுங்கில் ஷெப் மந்த்ரா சீசன் 2 என்கிற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க இருக்கிறார் லட்சுமி மஞ்சு. வரும் செப்டம்பர் 30ம் தேதி முதல் ஆஹா ஓடிடி தளத்தில் இதன் முதல் எபிசோட் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் மாளவிகா மோகனன், ரிது வர்மா மற்றும் வித்யுலேகா ராமன் உள்ளிட்டோர் முதல் எபிசோடில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி குறித்து லட்சுமி மஞ்சு கூறும்போது எங்கள் குடும்பமே உணவு பிரியர்கள் நிரம்பிய குடும்பம். அதனால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் எனக்கு அதிக மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.