என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமானவர் ஸ்ரீநாத் பாஷி. இவர் பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கும்பலாங்கி நைட்ஸ், நிவின்பாலியுடன் ஜேக்கப்பிண்டே சொர்க்க ராஜ்ஜியம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இந்த நிலையில் இவர் நடித்துள்ள சட்டம்பி என்கிற படம் இந்த வாரம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் புரமோஷன் நிகழ்ச்சிக்காக யூடியூப் சேனல் ஒன்றின் அலுவலகத்திற்கு சென்று நேரடியாக பேட்டி அளித்தார். இந்த நிலையில் அவரைப் பேட்டி கண்ட தொகுப்பாளினி அவர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசி அவமரியாதை செய்ததாக ஸ்ரீநாத் பாஷி மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதுபற்றி போலீசார் விசாரித்தபோது ஸ்ரீநாத் பாஷி கூறுகையில், ‛பேட்டியின்போது தன்னை வேண்டுமென்றே மன உளைச்சல் ஏற்படுத்தும் விதமாக உள்நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட தொகுப்பாளினி கேள்விகளை கேட்டதாகவும் அதனால் தான் ஒரு கட்டத்தில் கோபத்துடன் பேச நேர்ந்ததாகவும்' கூறியுள்ளார். அது மட்டுமல்ல இன்னொரு சேனலிலும் இவர் பேட்டியின்போது அங்கிருந்து தொகுப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ கிளிப் ஒன்றும் வெளியாகி இன்னும் பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது.