பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் | அமலாக்கத்துறைக்கு வந்த ஸ்ரீகாந்த்: 10 மணி நேரம் விசாரணை | 70 கோடி வசூலித்த 'பைசன்' | பிளாஷ்பேக் : 18 வயதில் இயக்குனரான சுந்தர் கே.விஜயன் | பிளாஷ்பேக் : 22 மொழிகளில் சப் டைட்டில் போடப்பட்ட முதல் தமிழ் படம் | 150 ரூபாய் இல்லாமல் கஷ்டப்பட்டேன்: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் | ''பிரச்னை பண்ணக்கூடாது, ஸ்வீட் ஆக இருக்கணும்'': டிடிஎப் வாசனுக்கு அபிராமி அட்வைஸ் |

மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் உன்னி முகுந்தன். மலையாளம் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் அவ்வப்போது நடித்து வரும் இவர், கடந்த இரண்டு வருடங்களில் ஒரு நடிகராக மட்டுமல்ல தயாரிப்பாளராகவும் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் பெற்றுள்ளார், கடந்த வருடம் இவர் நடித்த 'மார்கோ' திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்த நிலையில் சமீபத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான 'நரிவேட்ட' என்கிற படத்தை இவரது மேனேஜரான விபின் குமார் என்பவர் பாராட்டி எழுதியதற்காக அவரை உன்னி முகுந்தன் தகாத வார்த்தைகளில் திட்டியதுடன், தாக்கினார் என காவல்துறையில் புகார் அளித்தார் விபின் குமார். இதனைத் தொடர்ந்து உன்னி முகுந்தன் பத்திரிக்கையாளர்களிடம் விளக்கம் அளிக்கும்போது, 'அவர் என்னுடைய மேனேஜரே அல்ல.. என்னுடைய படங்களில் ஒரு பிஆர்ஓ ஆக பணியாற்ற வந்தவர் தான். என்னைப் பற்றி திரையுலகில் தவறான செய்திகளை பரப்புவதை அறிந்து அவரை கண்டித்தேன். அதற்கு மன்னிப்பு கடிதம் எழுதி தருவதாக கூறிவிட்டு என் மீது தற்போது இப்படி அவதூறு பரப்பி வருகிறார்,' என்று பதிலுக்கு குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது கொச்சியில் உள்ள காவல் நிலையத்தில் விபின் குமார் மீது புகார் அளித்துள்ளார் உன்னி முகுந்தன். இந்த புகாரில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னதாக தனக்கு கொலை மிரட்டல் விடுத்து அவ்வப்போது ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் இதன் பின்னணியில் விபின் குமார் தான் இருக்கிறார் என்றும் இவரால் தனது உயிருக்கும் தொழிலுக்கும் எந்த பாதிப்பும் வந்துவிடாமல் பாதுகாக்க அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார் உன்னி முகுந்தன்.