ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் | 'தொடரும்' வரவேற்பு : மோகன்லால் அன்புப் பதிவு | நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் | ஏப்., 30ல் கிஸ் முதல் பாடல் வெளியீடு |
மலையாளத்தில் மாடம்பி, கிராண்ட் மாஸ்டர், மிஸ்டர் பிராடு, வில்லன், ஆராட்டு என மோகன்லாலை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கி வந்தவர் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன். மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனராக அறியப்பட்ட இவர் தற்போது மம்முட்டியை வைத்து கிறிஸ்டோபர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதற்குமுன் 12 வருடங்களுக்கு முன்பாக மம்முட்டியை வைத்து பிரமாணி என்கிற படத்தை இயக்கியவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மம்முட்டியுடன் இந்த படத்தில் கை கோர்த்துள்ளார்.
கதாநாயகிகளாக அமலாபால், ஐஸ்வர்ய லட்சுமி, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு தான் துவங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் மம்முட்டி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை தெரியப்படுத்தி உள்ள இயக்குனர் உன்னிகிருஷ்ணன் இந்தப்படத்தில் மம்முட்டி, போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.