ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான அங்கமாலி டைரீஸ், படத்தின் மூலம் இயக்குனராக புகழ் பெற்றவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தான் இயக்கிய அனைத்துப் படங்களிலும் வித்தியாசமான கதைக்களங்களை கையாண்டிருந்த லிஜோ ஜோஸ் பள்ளிசேரி ரொம்பவே எதார்த்தமாக தனது படங்களை கொடுத்து வருகிறார்.
இந்தநிலையில் தற்போது நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தில் இவரது இயக்கத்தில் மம்முட்டி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மம்முட்டி வெகு சாதாரணமான ஒரு கிராமத்து மனிதன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து மம்முட்டி அடுத்ததாக மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தற்போது மலையாள திரையுலக வட்டாரத்தில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரபூர்வமாக இன்னும் இந்த தகவல் உறுதி செய்யப்படாவிட்டாலும் நிச்சயமாக சில நாட்களுக்குள் அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. மோகன்லால் தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடித்துவரும் ராம் படத்தை முடித்த பின்பு இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.