இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

வலிமை படத்தில் வில்லனாக நடித்த கார்த்திகேயா தெலுங்கில் நடித்து வரும் காமெடி படத்திற்கு 'பெதுருலங்கா 2012' என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இதில் கார்த்திகேயா ஜோடியாக டிஜே தில்லு படத்தின் மூலம் புகழ்பெற்ற நேகா ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் அஜய் கோஷ், சத்யா, ராஜ்குமார் காசிரெட்டி, ஸ்ரீகாந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள். ரவீந்திர பெனர்ஜி முப்பனேனி தயாரிக்கிறார்.
கிளாக்ஸ் இயக்குகிறார் படம் பற்றி அவர் கூறியதாவது: இது கோதாவரி ஆற்றின் பின்னணியில் உருவாகும் ஒரு நகைச்சுவை படம். யானம், காக்கிநாடா, கோதாவரி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் கடைசி ஷெட்யூல் விரைவில் முடிவடைகிறது. இந்தப் படத்தில் கார்த்திகேயாவின் புதிய பரிமாணத்தை காணலாம். ஒரு கிராமத்தை கதையின் அடிப்படையாக எடுத்துக்கொண்டு, அதை வேடிக்கை மற்றும் உணர்ச்சிகளால் நிரப்பி உள்ளோம். இது ஒரு வலுவான உள்ளடக்கம் மற்றும் பெருங்களிப்புடைய நகைச்சுவையையும் கொண்டுள்ளது.
சுதந்திரமான வாழ்க்கையை ரசித்து வாழும் கார்த்திகேயாவுக்கு சமூகம் சில நிர்பந்தங்களை தருகிறது. அவர் அதற்காக சமரசம் செய்து கொள்கிறாரா? தன் போக்கிலேயே அதை சமாளிக்கிறாரா என்பதுதான் படத்தின் கதை. என்கிறார் கிளாக்ஸ்.