‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான ஸ்ரீநாத் பாஷி என்பவர் ஒரு யு-டியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்க சென்றபோது அங்கிருந்த தொகுப்பாளினியை அநாகரிகமான வார்த்தைகளால் திட்டினார் என்ற செய்தி வெளியாகி கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பை கிளப்பியது. இந்தநிலையில் நடிகர் ஸ்ரீநாத் பாஷி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மோகன்லால் நடிப்பில் வெளியான பிரணயம் என்கிற படத்தின் மூலம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகமான ஸ்ரீநாத் பாஷி, பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கும்பலாங்கி நைட்ஸ், நிவின்பாலியுடன் ஜேக்கப்பிண்டே சொர்க்க ராஜ்ஜியம் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனிக்கத்தக்க நடிகராக மாறினார்
இந்தநிலையில் கடந்த வெள்ளியன்று இவர் கதாநாயகனாக நடித்துள்ள சட்டம்பி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிரபல யூடியூப் சேனல் ஒன்றின் பேட்டிக்காக கலந்து கொண்டார் ஸ்ரீநாத் பாஷி. அப்போது தொகுப்பாளர் தன்னை எரிச்சலூட்டும் விதமாக கேள்வி கேட்டதால் கோபமான ஸ்ரீநாத் பாஷி, கேரமாவை ஆப் செய்ய சொல்லிவிட்டு, அவரை அவதூறான வார்த்தைகளால் விமர்சித்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதுகுறித்து பின்னர் மன்னிப்பு தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் ஸ்ரீநாத் பாஷி. இந்தநிலையில் போலீசார் அவரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.. அதைத் தொடர்ந்து நேரில் சென்று, போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார் பின்னர் ஸ்ரீநாத் பாஷி. அரைமணி நேர விசாரணைக்கு பிறகு போலீசார் அவரை கைது செய்தனர். அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.




