ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

மலையாள திரையுலகில் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனராக அறியப்படுபவர் பி.உன்னிகிருஷ்ணன். மலையாள திரையுலக இயக்குனர் சங்கத்தில் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கும் இவர் கடந்த பத்து வருடங்களில் தொடர்ந்து மோகன்லாலை வைத்தே படங்களை இயக்கி வந்தார். இதில் நடிகர் விஷால், நடிகைகள் ஹன்சிகா, ராசி கண்ணா ஆகியோரை முதன்முதலாக மலையாளத்தில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. இந்த நிலையில் தற்போது மம்முட்டியை வைத்து தனது புதிய படத்தை இயக்கி வருகிறார் பி.உன்னிகிருஷ்ணன்.
ஏற்கனவே மம்முட்டியை வைத்து பிரமாணி என்கிற படத்தை இயக்கியுள்ள உன்னிகிருஷ்ணன், கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மம்முட்டி படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்று மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் முதல் தேதியை முன்னிட்டு இந்த படத்திற்கு கிறிஸ்டோபர் என டைட்டில் வைக்கப்பட்டு போஸ்டர் வெளியாகி உள்ளது. 'பயோகிராபி ஆப் ஏ விஜிலன்ட் காப்' என்கிற இந்த படத்தின் டேக்லைன் மூலம் இதில் மம்முட்டி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது.