பயணம் எளிதல்ல! ; மங்காத்தா நடிகைக்கு அஜித் சொன்ன அட்வைஸ் | பழம்பெரும் நடிகையான ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவி காலமானார் | சுரேஷ்கோபி படத்துக்கு ஒரு வழியாக யு/ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி |
இந்த இரண்டு வருடங்களில் சினிமா பிரபலங்கள் பல பேர் தங்களது விவாகரத்து அறிவிப்பையும், மறுதிருமண அறிவிப்பையும் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் பிரபல தெலுங்கு இயக்குனர் சீனு வைட்லா தனது மனைவி ரூபாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மகேஷ்பாபு நடித்த தூக்குடு, ஆகடு மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த பாட்ஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியவர் தான் சீனு வைட்லா. இந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களாக புதிய படம் ஏதும் இயக்காமல் இருந்து வருகிறார்.
இதன் பின்னணியில் அவருக்கும் அவரது மனைவிக்குமான குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சீனு வைட்லாவின் மனைவி ரூபா, அவர் இயக்கிய பல படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர். அதுமட்டுமல்ல முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டோருக்கும் பிரத்தியோக ஆடை வடிவமைப்பாளராக இருப்பவர். ரூபாவின் கேரியரில் அவர் மிகப்பெரிய அளவு வளர வேண்டும் என அதற்கு உறுதுணையாக நின்றவர் தான் சீனு வைட்லா. இருந்தாலும் தற்போது இவர்கள் இருவருக்குமான பிரிவு தவிர்க்க முடியாததாக மாறி, விவாகரத்து கோரி நீதிமன்றம் வரை சென்றுள்ளது துரதிர்ஷ்டமான ஒன்றுதான்.