''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக சம்பள உயர்வு அளிக்கப்படாததால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா சினிமா தொழிலாளர்களுக்கு சமீபத்தில் சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இயக்குனர்களும், நடிகர்களும் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி உள்ளனர். இதன் காரணமாக சிறு முதலீட்டு படங்கள் எடுக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதனால் தெலுங்கு தயாரிப்பாளர்கள் படப்பிடிப்புகளை நிறுத்த முடிவு செய்திருக்கிறார்கள்.
தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஓடிடி வெளியீடு மற்றும் நடிகர், நடிகைகள், இயக்குனர்களின் சம்பள உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. சம்பள உயர்வால் அதிக செலவு ஏற்படுகிறது. எனவே, செலவு குறைப்பது தொடர்பாக விரைவில் முடிவு எடுத்தாக வேண்டும் என்று பல தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளை நிறுத்தி வைத்து, இந்த விவகாரத்தில் விரைவில் முடிவு எடுக்க வேண்டும். 2 மாதங்கள் கடந்தாலும் படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று, தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது. இதுபற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
நேற்று சென்னையில் நடந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க விழாவில் கலந்து கொண்ட தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கல்யாண் இதனை உறுதி செய்தார்.