'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' | படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ |

கேரளாவில் ஆண்டுதோறும் சர்வதேச பெண்கள் திரைப்பட விழா நடக்கிறது. இதனை கேரள அரசின் கலாசித்ர அகாடமி நடத்துகிறது. பெண்களை மையப்படுத்தி வெளிவந்த படங்கள், பெண்கள் இயக்கிய படங்கள் இதில் திரையிடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கேரள சர்வதேசப் பெண்கள் திரைப்பட விழா கோழிக்கோட்டில் தொடங்கியது.
இந்தப் பட விழாவில் திரையிட, குஞ்சில்லா மாசிலாமணி என்பவர், தான் இயக்கிய 'அசங்காதிதார்' என்ற படத்தை அனுப்பி இருந்தார். இது ஓடிடி தளத்தில் வெளியான 'பிரீடம் பைட்' என்ற அந்தாலஜியில் இடம்பெற்ற ஒரு குறும்படம். பொதுவாக இந்த விழாவில் ஓடிடியில் வெளியான படங்கள் திரையிடப்படுவதில்லை. இதனை காரணம் காட்டி அசங்காததிதார் படத்தை நிராகரித்து விட்டனர்.
இந்த விதியை மாற்ற வேண்டும். எல்லா தளத்திலும் வெளியாகும் படங்களை வெளியிட வேண்டும் என்று கேரள பெண் இயக்குனர்கள் வற்புறுத்தி வந்தார்கள். இந்நிலையில் சர்வதே திரைப்பட தொடக்க விழாவில் இயக்குநர் குஞ்சில்லா மாசிலாமணி மேடை ஏறிச் சென்று அரசுக்கு எதிராகவும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகவும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தார். இதை தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து அவரை அப்புறப்படுத்தினர். ஆனால் கைது செய்யவில்லை.
இது திரைப்பட விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை திரைப்படவிழாவில் இயக்குனர் லீனா மணிமேகலை திடீர் ஆர்ப்பாட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.