குட் பேட் அக்லி டிரைலர் இன்று வெளியாகிறது | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
கமல்ஹாசன் நடிப்பில் தமிழில் அடுத்ததாக இந்தியன் 2 படம் ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள கல்கி படத்தின் முதல் பாகத்திலும் கமல்ஹாசன் வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனால் தற்போது இந்த இரண்டு படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் மாறி மாறி கலந்து கொண்டு வருகிறார் கமல்.
கல்கி படம் மகாபாரதத்தை தொடர்புப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதால் கமல் ஒரு புரமோஷன் நிகழ்ச்சியின் போது தன்னுடைய விஸ்வரூபம் மற்றும் விக்ரம் படங்களின் காட்சிகளும் மகாபாரதத்தை தூண்டுதலாக கொண்டு உருவாக்கப்பட்டது என்கிற புதிய தகவலை கூறியுள்ளார்.
விஸ்வரூபம் படத்தில் பெண் தன்மை கொண்டவராக காணப்படும் கமல் ஒரு கட்டத்தில் ஆக்ரோஷ அவதாரம் எடுப்பார். மகாபாரதத்தில் பாண்டவர்கள் காட்டில் ஒளிந்து வாழும் காலகட்டத்தில் அவர்கள் ஒரு வருடம் நகரத்தில் தங்களது உருவங்களை மறைத்து வாழ வேண்டும் என்கிற நிபந்தனையும் இருந்தது. அதன்படி அர்ஜூனன் பெண் உருவத்தில் தன்னை மறைத்துக் கொண்டு இருந்தார். அவரை தாக்குவதற்காக சிலர் முற்படும்போது சரியாக கணக்குப்படி நிபந்தனை காலம் முடிவடையும். அப்போது தனது பெண் வேடத்தை கலைத்து விட்டு அர்ஜூனனாக வந்து எதிரிகளுடன் மோதுவார். அதுதான் விஸ்வரூபம் சண்டைக்காட்சிக்கு உந்துதலாக இருந்தது. என்னுடைய விக்ரம் படத்தின் இடைவேளை காட்சியை எடுப்பதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கும் இதுதான் உந்துதலாக இருந்தது என்று அவரும் என்னிடம் சொன்னார் என கூறியுள்ளார் கமல்.