விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் |

மலையாளத்தில் பிரபல இயக்குனர் லால்ஜோஸ் இயக்கிய முல்லா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மீரா நந்தன்.. தமிழில் வால்மீகி, அய்யனார், சண்டமாருதம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். வாய்ப்புகள் ஒரு கட்டத்தில் குறையவே கடந்த 2016ல் சினிமாவை விட்டு ஒதுங்கி துபாய்க்கு சென்று அங்கே உள்ள பிரபல எப்எம்-ல் ரேடியோ ஜாக்கியாக பணியாற்ற தொடங்கினார். அதன்பிறகு விடுமுறை கிடைக்கும் சமயத்தில் சில மலையாள படங்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் லண்டனை சேர்ந்த ஸ்ரீஜூ என்பவருக்கும் மீரா நந்தனுக்கும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து இன்று குருவாயூர் கோவிலில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இருவருக்கும் இனிதே திருமணம் நடைபெற்றது. “திருமண வலைதளம் மூலமாக வரன் பார்க்கப்பட்டு அதன் பிறகு இருவரும் பேசி பழகி தற்போது திருமணத்தில் இணைந்துள்ளோம். ஆனாலும் எனது குணத்திற்கு அப்படியே நேர்மாறானவர் என்னுடைய கணவர். அதுதான் எங்களுக்குள் ஈர்ப்பை உண்டாக்கியது” என்று கூறியுள்ளார் மீரா நந்தன்.
திருமனந்த்திற்கு முந்தைய மெஹந்தி நிகழ்வில் நடிகைகள் நஸ்ரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




