ஆதிக் ரவிச்சந்திரன், ஐஸ்வர்யா தம்பதிக்கு ஆண் குழந்தை | குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை குழந்தையுடன் வந்து வாங்குறாங்க: பேரரசு கிண்டல் | விஜய் மேனேஜர் குறித்து நடிகை ஓவியா அதிரடி பதிவு | டிமாண்டி காலனி 6 பாகங்கள் வரை வரும் : இயக்குனர் தகவல் | 'தி பாரடைஸ்' மறு படப்பிடிப்பா? : தயாரிப்பு தரப்பு மறுப்பு | ஜோதிகாவின் ஹிந்தி படம் 'சிஸ்டம்' : 22ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது | பிளாஷ்பேக் : 'அன்னக்கிளி'யை வெற்றிக் கிளியாக்கிய அந்த 3 டிக்கெட் | பிளாஷ்பேக் : தன் பாடல்களை கூட கேட்க முடியாமல் போன இசை அமைப்பாளர் | ஆர்த்தி ரவி குறித்து பேச கெனிஷாவுக்கு கோர்ட் தடை | நடிகர் சங்க பதவியில் இருந்து விலகிய 'திரிஷ்யம்' பட நடிகை |

பிரித்விராஜ் நடிப்பில் நீண்ட நாளைக்கு பிறகு அவர் நடித்துள்ள மாஸ் ஆக்சன் படமாக மலையாளத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கடுவா. மலையாளத்தில் அதிகப்படியான ஆக்சன் படங்களை இயக்கிய இயக்குனர் ஷாஜி கைலாஷ், 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரித்விராஜை வைத்து இயக்கியுள்ள படம் இது. மலையாளத்தில் உருவாகி, தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் இந்த படம் வெளியாகிறது. கடந்த ஜூன் 30-ஆம் தேதி வெளியாக வேண்டிய இந்தப் படம் திடீரென ஒரு வாரம் கழித்து ஜூலை 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்த படம் கடுவாக்குன்னல் குருவச்சன் ஜோஸ் என்பவரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருப்பதாகவும் தற்போது உயிருடன் இருக்கும் அவர் இந்த படம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை கேட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதிமாற்றி வைக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இன்னொரு பக்கம் இந்த படத்தின் சென்சார் வேலைகள் முடியவில்லை அதனால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மற்ற சில பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு நாளை இந்த படம் மலையாளத்தில் வெளியாகிறது. நாளை மறுநாள் (ஜூலை-8) இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியாகிறது என நடிகர் பிரித்விராஜ் அறிவித்துள்ளார்.