பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழிகளில் போஜ்புரி மொழியும் ஒன்று. வட இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் 70 மில்லியன், பீகாரில் 80 மில்லியன், மற்ற இந்தியப் பகுதிகளில் 6 மில்லியன் ஆகியவற்றையும் சேர்த்து உலக அளவில் சுமார் 150 மில்லியன் மக்கள் இந்த மொழியைப் பேசுவதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது.
போஜ்புரி மொழியில் ஏற்கெனவே சில திரைப்படங்கள் வந்துள்ளன. மற்ற மொழிப் படங்களும் அம்மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ளன. கன்னடத்தில் வெளிவந்த 'கேஜிஎப்' படத்தின் முதல் பாகம் போஜ்புரி மொழியில் டப்பிங் செய்யப்பட்டு யூடியூபில் 2020ம் வருடக் கடைசியில் வெளியானது.
தற்போது அந்த வீடியோ 600 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது. உலக அளவில் ஒரு திரைப்படம் இந்த அளவிற்கு பார்வைகளை இதுவரை பெற்றதில்லை. மேலும் இந்த வீடியோவிற்கு 59 லட்சம் லைக்குகளும் கிடைத்துள்ளன. 'கேஜிஎப் 2' படம் போஜ்புரி மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகினாலும் இந்த சாதனை முறியடிக்கப்படுமா என்பது சந்தேகம்தான்.