பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
தெலுங்கில் சாய்பல்லவி நடிப்பில் வரும் ஜூன் 17ம் தேதி வெளியாக இருக்கும் படம் விராட பருவம். ராணா கதாநாயகனாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி நடித்துள்ள இந்த படத்தை வேணு உடுகுலா என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சாய்பல்லவி ஒரு நக்சலைட் கதாபாத்திரத்திலும் அவரது பால்ய கால தோழராக, அதேசமயம் போலீஸ் அதிகாரியாக ராணாவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து சாய்பல்லவியும் ராணாவும் கலந்து கொண்டு வருகின்றனர்.
அப்படி ஒரு நிகழ்வில் ராணா பேசியபோது, “இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு திரையுலகிலும் எனது நட்பு வட்டாரத்திலும் ஆக்சன் படம் பண்ணுவதை விட்டுவிட்டு இப்படி ஆர்ட் நடித்துக் கொண்டிருக்கிறாயே என கிண்டல் கூட செய்தார்கள். படம் பார்த்தார்கள் என்றால் அவர்களது எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள்.
இந்த படத்தில் சாய்பல்லவியின் பங்களிப்பு தான் மிக முக்கியமானது.. இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு என்னைத்தவிர வேறு எந்த நடிகரை வேண்டுமானாலும் நடிக்க வைத்து விடலாம்.. ஆனால் சாய்பல்லவியின் கதாபாத்திரத்தில் அவரைத்தவிர வேறு ஒருவரை நினைத்து பார்க்கவே முடியவில்லை” என்று செல்லுமிடமெல்லாம் சாய்பல்லவி யின் புகழ் பாடி வருகிறார் ராணா.
இந்த படம் கதாநாயகியை மையப்படுத்தியது என்றாலும் அதுபற்றி எல்லாம் எந்த ஈகோவும் இல்லாமல் சாய்பல்லவியை புரமோட் செய்யும் ராணாவின் இந்த செயல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.