ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
மலையாள திரையுலகின் இளம் முன்னணி நடிகர் பிரித்விராஜ். இவரது மனைவி சுப்ரியா மேனன். மும்பையில் பத்திரிக்கை நிருபராக பணிபுரிந்த இவரை ஒரு பேட்டியின்போது சந்தித்த பிரித்திவிராஜ், இவருடன் காதலில் விழுந்து பின்னர் திருமணமும் செய்து கொண்டார். பிரித்விராஜ் பிசியான நடிகராகவும், இயக்குனராகவும் மாறிவிட்ட நிலையில் சுப்ரியா மேனன் பிரித்விராஜ் புரடக்சன் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சுப்ரியா, மறைந்த தனது தந்தை குறித்து சமீபத்தில் சோகமான பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். இதற்கு நெட்டிசன் ஒருவர் எதற்கு சோசியல் மீடியாவை இப்படி சோகமான பதிவுகளுக்கு பயன்படுத்துகிறீர்கள்..? இப்படி பதிவிடுவதால் உங்கள் தந்தை வந்துவிடப் போகிறாரா என்ன என கேள்வி எழுப்பி இருந்தார்.
அவரது கேள்விக்கு கொஞ்சமும் கோபப்படாமல், “இன்னும் இதுபோன்ற சூழ்நிலையை நீங்கள் சந்தித்திருக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். சோசியல் மீடியா என்பது சந்தோஷத்தை மட்டும் பகிர்ந்து கொள்வதற்கு அல்ல.. உங்களுக்கு இப்படிப்பட்ட பதிவுகள் பிடிக்கவில்லை என்றால் கமெண்ட் செய்வதற்கு பதிலாக, என்னை பின்தொடர்வதை நிறுத்திவிட்டு வேறு வேலையைப் பார்க்க போகலாம்.. எதற்காக நேரத்தை வீணாக செலவிடுகிறீர்கள்” என்று நாகரிகமாக பதிலடி கொடுத்துள்ளார். அவரது இந்த பதிலுக்கு வரவேற்பு கிடைத்துள்ளதுடன் அப்படி கேள்வி கேட்ட நபரையும் மற்ற நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர்.