நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மலையாள முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முன்னணி நடிகர் திலீப் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் திலீப் மட்டும் ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். இந்த நிலையில் விசாரணை அதிகாரியை கொல்ல திட்டமிட்டதாக மற்றொரு வழக்கு திலீப் மீது தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சில ஆடியோக்கள் வெளியானது.
இந்த வழக்கில் 8வது குற்றவாளியாக நடிகையும், திலீப்பின் இரண்டாவது மனைவியுமான காவ்யாக மாதவன் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே அவர் விசாரணைக்கு இன்று (ஏப்11) வரவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த சம்மனுக்கு பதில் அளித்துள்ள காவ்யா மாதவன், தான் தற்போது சொந்த பணி காரணமாக சென்னையில் இருப்பதாகவும், இதனால் ஆஜராக இயலாது என்றும், வருகிற 13ம் தேதி என் வீட்டில் விசாரணையை வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் தீலீப்பின் முன்னாள் மனைவியும், நடிகையுமான மஞ்சு வாரியரிடம் நேற்று விசாரணை அதிகாரிகள் திடீரென விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் கிடைத்துள்ள ஆடியோ ஆதாரங்கள் உண்மைதானா என்பதை அவரிடம் விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது.