பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு. சத்தமின்றி பல சமூக பணிகளையும் செய்து வருகிறர். தனது தந்தை கிருஷ்ணாவின் பெயரில் மகேஷ்பாபு நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் இந்த பணிகளை செய்து வருகிறார். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பல்வேறு மருத்துவ பணிகள் செய்வதோடு இரண்டு மாநிலங்களிலும் பல கிராமங்களை தத்தெடுத்துள்ளார்.
இந்த நிலையில் உலக சுகாதார தினத்தையொட்டி 30 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். இந்த தகவல் அவர் மனைவி நம்ரதா ஷிரோத்கர் வெளியிட்டுள்ள பதிவின் மூலம் தெரியவந்திருக்கிறது.
"உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, 30 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிகழ்வை ஆளுநர் ஸ்ரீ பிஸ்வபூசன் ஹரிசந்தன் பாராட்டினார். தரமான மருத்துவ சிகிச்சை வழங்கிய ஆந்திர மருத்துவமனை மருத்துவக்குழுவுக்கு நன்றிகள்" என்று நம்ரதா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை ஆயிரம் குழந்தைகளுக்கு மேல் இதய அறுவை சிகிச்சை செய்வதற்கு மகேஷ்பாபு நிதி உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.