ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் தெலுங்கு ‛பேபி' | லோகேஷ் கனகராஜ் அந்த விஷயத்தில் தலையிடுவதில்லை : சிலாகிக்கும் நாகார்ஜுனா | இன்னும் ஏழே நாளில் படப்பிடிப்பு முடிகிறது: 'புஷ்பா 2' விழாவில் தயாரிப்பாளர் கொடுத்த 'குட் பேட் அக்லி' அப்டேட் | ராம் சரண் 16வது பட படப்பிடிப்பு மைசூரில் துவக்கம் | அல்லு அர்ஜுனிடம் இயக்குனர் நெல்சன் வைத்த கோரிக்கை | ரிஷப் ஷெட்டியின் இரண்டாவது தெலுங்கு படம்! | பெண்கள் பாதுகாப்பு - விஜய் வெளியிட்ட அறிக்கை | பேபி ஜான் - கவர்ச்சி புயலாக உருவெடுத்த கீர்த்தி சுரேஷ் | சீனாவில் மஹாராஜா ரிலீஸ் : முன்பதிவு எப்படி | காதல் படங்கள் குறைந்து விட்டது : கார்த்தி வருத்தம் |
மலையாள நடிகர் திலீப், நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறை சென்று, பின் ஜாமீனில் விடுதலையானார். இந்த நிலையில் அவர் மீது இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர் கூறிய சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என நினைத்து முன் ஜாமீன் கோரி விண்ணப்பித்தார் நடிகர் திலீப். இந்த மனுவின் மீதான விசாரணை ஒவ்வொரு முறையும் தள்ளி வைக்கப்பட்டு இதுவரை நான்கு முறை விசாரணை தள்ளிப்போய் உள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் போலீசார் முன்னிலையில் மூன்று நாட்களுக்கு திலீப் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அந்த விசாரணை அறிக்கை ஜனவரி 27 க்குள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் திலீப்பிடம் மூன்று நாட்கள் விசாரணை முடிந்து அதன் அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விசாரணை தரப்பு இன்னும் ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளது. அதற்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்றம், வரும் பிப்ரவரி-2ல் பிறப்பின் முன் ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.