சென்னைக்கு திரும்பிய நடிகர் விஜய் | தனுஷ் நடித்து இயக்கும் புதிய படம் | சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் டி.ராஜேந்தர் | இளையராஜா ரிகர்சலுக்கு வந்த ரஜினிகாந்த்: கைதட்டி பாடல்களை ரசித்தார் | சமந்தாவுடன் இணைந்து நடித்த படம்: மலரும் நினைவுகளை பகிர்ந்த நாகசைதன்யா | நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன் | விக்ரம் பிரபு நடிக்கும் ‛ரத்தமும் சதையும்' | பேஷன் ஷோ ஸ்டைல் வாக் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன் | சண்டைக் காட்சியின்போது விபத்தில் சிக்கிய விஜயதேவரகொண்டா- சமந்தா | மலையாள இசை அமைப்பாளர் காலமானார் |
மம்முட்டி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் படம் சிபிஐ 5. ஏற்கனவே நான்கு பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில், கிட்டத்தட்ட 17 வருட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் ஐந்தாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த சமயத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் மம்முட்டி.
இதைத்தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மம்முட்டி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் தொற்றிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக தெரிகிறது. தான் ஏற்கனவே நடித்து வந்த சிபிஐ 5 படத்தின் படப்பிடிப்பில் மம்முட்டி மீண்டும் கலந்து கொண்டு நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்றும் தெரிய வந்துள்ளது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்ட புகைப்படத்தை படத்தின் இயக்குனர் கே.மது தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.