தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் | 'ப்ரோ கோடு' தலைப்பிற்கு சிக்கல்: டில்லி உயர்நீதிமன்ற தடையால் தலைவலி | ரியோவுக்கு பிடித்த ஹீரோயின் : மனைவி சொன்ன பதில் | காதலருடன் புதிய படத்திற்கு பூஜை போட்ட சமந்தா | இந்த வாரம், ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் | மார்கோ-2வை ஒதுக்கி வைத்துவிட்டு மம்முட்டி படத்தை அறிவித்த தயாரிப்பாளர் | தனுஷ், கார்த்தி இல்லாமல் இரண்டாம் பாகமா ? ; செல்வராகவன் பதில் | 'ஆர்யன்' படத்தில் 'கண்ணூர் ஸ்குவாட்' இன்ஸ்பிரேஷன் ; மனம் திறந்த விஷ்ணு விஷால் | நடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் |

செலக்டிவான படங்களில் மட்டும் நடித்து வரும் நடிகை பார்வதி, மலையாளத்தில் தான் அறிமுகமான காலகட்டத்திலேயே நடிகர் மோகன்லாலுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து விட்டார். அதேசமயம் மம்முட்டியுடன் இணைந்து அவர் ஒரு படத்தில்கூட நடித்ததில்லை. இந்த நிலையில் தற்போது ரதீனா என்பவர் இயக்கத்தில் புழு என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார் பார்வதி.
இந்தப்படத்தின் இயக்குனர் ரதீனா இந்த கதையை கூறியதும் அதில் உருவாக்கப்பட்டிருந்த கதாநாயகி பாத்திரம் பார்வதியை ரொம்பவே கவர்ந்து விட்டதால் இதில் நான்தான் நடிப்பேன் என உறுதியாக கூறிவிட்டார். அதன்பிறகுதான் கதாநாயகனாக நடிப்பது யார் என இயக்குனரிடம் கேட்க அவர் மம்முட்டி என பதில் சொல்லியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ந்து போனார் பார்வதி.
காரணம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கசபா என்கிற படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக மம்முட்டி நடித்து இருந்தார் என கூறியதால் மம்முட்டி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் பார்வதி. இதனால் மம்முட்டிக்கு எதிரானவராகவே அவர் சித்தரிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் தனக்கு பிடித்த கதையும் கதாபாத்திரமும் கிடைத்தாலும் அதன் கதாநாயகன் மம்முட்டி என்பதால் அதில் எப்படி நடிக்க முடியும் என தயங்கினாராம் பார்வதி.
ஆனால் இந்த கதாபாத்திரத்தில் பார்வதியை நடிக்க சிபாரிசு செய்ததே மம்முட்டி தான் என இயக்குனர் கூறியதும் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் பார்வதி. தனது சர்ச்சை பேச்சு எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் தன்னை படத்தில் நடிக்க அழைத்த மம்முட்டியின் பெருந்தன்மை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் புகழ்ந்து கூறியுள்ளார் பார்வதி.