சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

தன் பதிவுகளில் ஏராளமான சர்ச்சைகளை ஏற்படுத்தி விடுவதில் வல்லவர் தான் சர்ச்சை மன்னன் என பெயரெடுத்த இயக்குனர் ராம்கோபால் வர்மா. தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு முடிவு குறித்து தனது கருத்தை சொல்கிறேன் என வழக்கம்போல சலசலப்பை ஏற்படுத்தினார் ராம்கோபால் வர்மா.
அதற்கடுத்த பதிவில் வேறுபக்கம் பார்வையை திருப்பிய ராம்கோபால் வர்மா, சமீபத்தில்தான் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தை பார்த்திருப்பார் போலும்.. உடனே தனது சமூக வலைதளப் பக்கத்தில் கேட்பவர்களுக்கு கடினமாக இருந்தாலும் அடுத்த மெகாஸ்டார் அல்லு அர்ஜுன் தான் என்பது தான் உண்மை என கூறியுள்ளார்.
இத்துடன் விட்டிருந்தாலாவது பரவாயில்லை.. இப்படி ஒரு திறமையான மகனை தெலுங்கு சினிமாவுக்கு கொடுத்துள்ளார் அவரது தந்தை அல்லு அரவிந்த் என்றும், இனிவரும் நாட்களில் தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய ஹீரோக்கள் எல்லாம் அல்லு அர்ஜுனின் உறவினர்கள் என்றே அறியப்படுவார்கள்” என்றும் கூறியிருந்தார். சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் இருவரையும் மட்டம் தட்டும் நோக்கில் இவரது பதிவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் இந்த இரண்டு பதிவுகளை மட்டும் டெலீட் செய்துவிட்டார் ராம்கோபால் வர்மா.




