கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
கடந்த இரண்டு அலைகளை விட இப்போது பரவ ஆரம்பித்திருக்கும் இந்த மூன்றாவது அலையால் திரையுலகை சேர்ந்த பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம் இந்த மூன்றாவது அலையின் வீரியம் குறைவோ என்னவோ, அனைவரும் ஒருசில நாட்களிலேயே நல்லபடியாக குணமாகியும் விடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் மலையாள நடிகர் மம்முட்டி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நடிகர் சுரேஷ்கோபியும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.
இதுகுறித்த தகவலை அவரே வெளியிட்டுள்ளதுடன், எவ்வளவோ முன்னெச்சரிக்கையாக இருந்தும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளேன். தற்போது என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டு விட்டேன். கடந்த சில நாட்களாக என்னை தொடர்பு கொண்டவர்கள் தங்களை ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த மாதம்தான் தமிழில் தான் நடித்து முடித்துள்ள தமிழரசன் என்கிற படத்தின் டப்பிங் பணிகளை முடித்த சுரேஷ்கோபி, கடந்த சில தினங்களுக்கு முன்தான் மலையாளத்தில் தான் நடித்துவரும் பாப்பன் படத்தின் படப்பிடிப்பையும் முடித்தார்.