2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மலையாள சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை மிக முக்கியமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. ஆனால் குணச்சித்திர நடிப்பிலும் தடம் பதித்து, 'பேரறியாதவர்' என்கிற படம் மூலம் சிறந்த நடிகருக்கான தேசியவிருதும் பெற்றார். அதை தொடர்ந்து வெறுமனே காமெடியோடு மட்டும் தன்னை சுருக்கிக்கொள்ளாமல் குணச்சித்திர நடிப்பிலும் வெளுத்து வாங்குகிறார்.
70 வயது கிழவராக இவர் நடித்த 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்' மற்றும் ஸ்ட்ரிக்ட்டான மோட்டார் வாகன ஆய்வாளராக நடித்திருந்த 'டிரைவிங் லைசென்ஸ்' என இரண்டு படங்களையும் அடுத்தடுத்து பார்த்தவர்கள் காமெடி நடிகராக பல வருடங்களை வீணடித்து விட்டாரே என்றுதான் கூறினார்கள். இந்தநிலையில் தற்போது .புதிய படம் ஒன்றில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சுராஜ் வெஞ்சாரமூடு.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப்படத்தின் கதையை தற்போது கேரளாவின் அரூர் பகுதியில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சுப்ரமணியன் என்பவர் தான் எழுதியுள்ளார். தனது நிஜ வாழ்க்கையில் நடந்த விறுவிறுப்பான சம்பவங்களின் அடிப்படையில் இந்த கதையை அவர் எழுதியுள்ளாராம். இவரது சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் தான் சுராஜ் நடிக்க இருக்கிறார்.