ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது |
தமிழில் 'மின்னலே' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து, பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தவர். கடந்த சில வருடங்களாக அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை.
கடைசியாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த 'காப்பான்' படத்திற்கு இசையமைத்திருந்தார். கடந்த இரண்டு வருடங்களாக ஹாரிஸ் இசையில் ஒரு தமிழ்ப் படம் கூட வரவில்லை.
தெலுங்கிலும் சில நேரடிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஹாரிஸ். அவர் இசையமைத்த பல தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டுள்ளதால் அங்கும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கில் உருவாகி 2017ல் வெளிவந்த 'ஸ்பைடர்' படத்திற்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் ஒரு படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
நேற்று தெலுங்கு ரசிகர்களுக்கு ஹாரிஸ் பொங்கல் வாழ்த்து தெரிவித்திருந்தார். அப்போது ஒரு ரசிகர், மீண்டும் எப்போது தெலுங்கில் இசையமைப்பீர்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஹாரிஸ், நிதின் நடிக்கும் படத்தில் பணியாற்றி வருகிறேன், இந்த வருடம் சந்திப்போம் என்று தெரிவித்திருந்தார். “எங்களது படத்திற்கு உங்களது மேஜிக்கை அனுபவிக்கக் காத்திருக்க முடியவில்லை,” என ஹாரிஸைப் பாராட்டி பதிவிட்டுள்ளார் நடிகர் நிதின். தமிழிலும் இந்த வருடம் ஹாரிஸ் படங்களை எதிர்பார்க்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.