விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

கடந்த 2016ல் மலையாள நடிகை கடத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட மூன்று மாத சிறைவாசத்திற்கு பின் ஜாமினில் வெளிவந்த திலீப்பிற்கு, கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக எந்தவித குடைச்சலும் கொடுக்காமல் அந்த வழக்கு அப்படியே அமுங்கி கிடந்தது.
இந்தநிலையில் திலீப்பின் நண்பராக இருந்து தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ள இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர் வெளியிட்ட சில தகவல்களின் அடிப்படையில் நடிகர் திலீப்பை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர் கேரள போலீசார். இதையடுத்து திலீப் முன்ஜாமினுக்கு விண்ணப்பித்தார். இந்த மனுவை வெள்ளிகிழமை (இன்று) விசாரிக்கும் வரை திலீப்பை கைது செய்ய தடை விதித்தது நீதிமன்றம்.
இதற்கிடையே ஆலுவாவில் உள்ள திலீப் வீட்டை சோதனையிடுவதற்கான அனுமதியை பெற்ற போலீசார் திலீப்பின் வீட்டிற்கு வந்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது. உடனே போலீசார் காம்பவுண்ட் சுவரேறி குதித்து திலீப்பின் வீட்டிற்குள் நுழைந்து போர்டிகோவில் காத்திருந்தனர். இந்த தகவல் அக்கம்பக்கத்தினர் மூலமாக திலீப்பின் காதுகளுக்கு சென்றதும் சிறிது நேரத்தில் திலீப்பின் உறவினர் ஒருவர் வந்து போலீசார் சோதனை செய்வதற்காக வீட்டின் கதவை திறந்து விட்டாராம்.