ஆக., 31க்கு தள்ளிப்போன ‛கோப்ரா' | பாஜக-வில் விரைவில் இணைய உள்ள நடிகை ஜெயசுதா | புஷ்பா 2 : பாடல் இசைக்கோர்ப்பு வேலைகள் ஆரம்பம் | நயன்தாரா திருமண நிகழ்வு, டாகுமெண்டரியாக வருகிறது… | அதிதி ஷங்கரை கவர்ந்த தமிழ் ஹீரோ | நியூயார்க்கில் நடைபெறும் சுதந்திர தின பேரணியில் அல்லு அர்ஜுன் | சந்திரமுகி 2 : முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | ராஜு முருகன் படத்திற்காக கெட்டப்பை மாற்றும் கார்த்தி | கமல் - உதயநிதி இணையும் படத்தை இயக்கும் பிரசாந்த் முருகேசன் | கிளாமர் இமேஜ் மாறவேண்டும்: யாஷிகா விருப்பம் |
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தை இயக்கியவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். தற்போது பிரித்விராஜ், நயன்தாரா இருவரையும் வைத்து கோல்ட்(தங்கம்) என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தநிலையில் வெங்கட் பிரபு சிம்பு கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற மாநாடு படத்தை சமீபத்தில் பார்த்த அல்போன்ஸ் புத்ரன் படம் குறித்தும் அதில் பங்கு பெற்றவர்கள் குறித்தும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, “மன்மதன் படத்தில் நடித்தது போன்ற சிம்புவை மீண்டும் இதில் பார்க்க முடிந்தது. எஸ்.ஜே.சூர்யாவும் கூட அவரது டைரக்ஷனில் நடிப்பது போன்றே ரிலாக்ஸாக நடித்திருந்தார். தவிர வெங்கட் பிரபு - யுவன் கூட்டணி இந்த படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது..
சரோஜா படத்தில் இடம்பெற்ற 'நிமிர்ந்து நில் துணிந்து செல்' என்கிற பாடல், நான் பலமுறை சோர்ந்துபோய் அமர்ந்த நேரத்திலெல்லாம் எனக்கு உற்சாகம் அளித்து, ஊக்கப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல உதவியது. இந்தப் பாடலை உருவாக்கிய உங்கள் இருவருக்கும் நான் என்ன திருப்பி செய்யப்போகிறேன் என்றுதான் தெரியவில்லை” என உருக்கமாக கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.