சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
கடந்த வருடம் கொரோனா முதல் அலை ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை மலையாள திரையுலகில் வெளியான படங்களில் நடிகர் பிரித்விராஜ் படங்களே அதிகம். அது மட்டுமல்ல தற்போது அதிக படங்களிலும் நடித்து வருகிறார் பிரித்விராஜ். அந்தவகையில் அவர் நடித்துள்ள ஜனகணமன என்கிற படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. தற்போது அவர் நடித்து வந்த விலாயுத் புத்தா என்கிற படத்தின் படப்பிடிப்பும் முடிந்து விட்டது. இந்தப்படம் இந்துகோபன் என்பவர் எழுதிய விலாயுத் புத்தா என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் டபுள் மோகனன் என்கிற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்துள்ளார். அதேசமயம் இந்த படத்தில் பாஸ்கரன் பிள்ளை என்கிற இன்னொரு முக்கிய கதாபாத்திரமும் இருக்கிறது. இந்த இருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ மோதல் தான் இந்த படத்தின் கதை. பிரித்விராஜ் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களில் வெளியான டிரைவிங் லைசென்ஸ் மற்றும் அய்யப்பனும் கோஷியும் ஆகிய இரண்டு படங்களும் இரண்டு நபர்களுக்கான ஈகோ மோதலை மையமாக வைத்து உருவாகி மிகப்பெரிய வெற்றியும் பெற்றன. அந்தவகையில் பிரித்விராஜூக்கு இந்த ஈகோ யுத்தம் சென்டிமென்ட் இந்த படத்திலும் கைகொடுக்கும் என நம்பலாம்.