ரஜினிகாந்தின் 'வேட்டையன்' முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? | வெற்றிமாறனின் விடுதலை-2 படத்தின் டப்பிங் தொடங்கியது | சமந்தா நடித்துள்ள சிட்டாடல் வெப் தொடர்- நவம்பரில் வெளியாகிறது!! | வேட்டையன் படம் பார்க்கச் சென்ற வீடியோவை வெளியிட்ட துஷாரா விஜயன்! | சர்ச்சை எதிரொலி! ஆயுத பூஜைக்கு வாழ்த்து சொன்ன விஜய்! | ஜிஎஸ்டி வரி நோட்டீஸ்: ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு தள்ளுபடி | ஹனுமான் இயக்குனர் தயாரிப்பில் 'சூப்பர் உமன்' படமாக உருவாகும் மகாகாளி | வேட்டையன் டைட்டில் அதிருப்தி ; ரசிகர்களிடம் ராணா சமாளிப்பு | 6வது வாரத்தில் 'தி கோட்', 4வது வாரத்தில் 'லப்பர் பந்து' | கிராமி விருது தேர்வில் ஆடுஜீவிதம் வெளியேறியது ஏன் ? ஏ.ஆர் ரஹ்மான் விளக்கம் |
சினிமாவில் மட்டுமல்ல மிகப்பெரிய நிறுவனங்களும் கூட தங்களது விளம்பரப்படங்களில் அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் ராபிடோ என்கிற நிறுவனத்துக்காக அல்லு அர்ஜுன் நடித்த விளம்பர வீடியோ ஒன்று வெளியானது. இந்த விளம்பரம் மூலம் அவருக்கு புதிய சிக்கலும் தேடிவந்துள்ளது.
இருசக்கர வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்செல்ல உதவும் ராபிடோ என்கிற ஆப்-பின் வசதிகளை விவரிக்கும் இந்த விளம்பரத்தில் தெலங்கானா அரசு போக்குவரத்து பேருந்துகள் கூட்ட நெரிசலாக இருப்பதாகவும் அவற்றில் பயணிப்பதற்கு பதிலாக ராபிடோ பயன்படுத்துவது சிறந்தது என்றும் அல்லு அர்ஜுன் வசனம் பேசியுள்ளார்.
இது அரசு போக்குவரத்து பேருந்துகளை அவமதிப்பு செய்யும் விதமாக இருப்பதாக தெலங்கானா அரசு போக்குவரத்து கழக நிர்வாக மேலாளர் சஜ்ஜனார் கூறியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு சேவை நிறுவனங்களை அவமதிப்பு செய்யும் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதை அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.