தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

மலையாளத்தில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'புலிமுருகன்'. முதன்முறையாக நூறுகோடிக்கும் மேல் வசூலித்து, மலையாள சினிமாவை வியாபர ரீதியாக அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற இந்தப்படத்தை இயக்குனர் வைசாக் இயக்கி இருந்தார். கதாசிரியர் உதயகிருஷ்ணா இந்தப்படத்தின் கதையை எழுதியிருந்தார். மீண்டும் இந்த கூட்டணி ஒரு புதிய படத்தில் இணைய உள்ளார்கள் என கடந்த இரண்டு வருடங்களாகவே சொல்லப்பட்டு வந்தது
இந்த நிலையில் மான்ஸ்டர் என்கிற படத்தில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக தனது சோஷியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார் மோகன்லால். மேலும் லக்கி சிங் என்கிற சர்தார்ஜி வேடத்தில் இந்தப்படத்தில் அவர் நடிக்கும் புகைப்படத்துடன் கூடிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.. இன்றுமுதல் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தொடர்ந்து மோகன்லாலின் படங்களை தயாரித்துவரும் அவரது ஆஸ்தான தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறார்.




