ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற த்ரிஷ்யம்-2 படத்தை அதே பெயரில் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் ரீமேக் செய்து எடுத்தனர். முதல் பாகத்தில் இடம்பெற்ற அதே நட்சத்திர கூட்டணியை வைத்து, இந்த முறை இயக்குனர் ஜீத்து ஜோசப்பே தெலுங்கிலும் இயக்கினார். மலையாளத்தை போலவே தெலுங்கிலும் இந்தப்படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என்கிற முடிவோடு தான் எடுத்து முடித்தார்கள். ஆனால் அதேசமயம் அசுரன் ரீமேக்காக வெங்கடேஷ் நடித்த நரப்பா படத்தை முதலில் வெளியிட முடிவு செய்ததால் த்ரிஷ்யம்-2 ரிலீஸை தள்ளி வைத்தனர்.
அதேபோல ராணா, சாய்பல்லவி நடிப்பில் உருவான விராட பர்வம் படம், அது தயாரான சமயத்திலேயே தியேட்டர் ரிலீஸ் தான் என்கிற முடிவிலேயே எடுக்கப்பட்டது. இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவித்தும் கொரோனா தாக்கம் காரணமாக அது தள்ளிப்போனது.
இந்த இரண்டு படங்களையும் சுதீர் வர்மா என்கிற தயாரிப்பாளர் தான் தயாரித்துள்ளார். இந்தநிலையில் தற்போது த்ரிஷ்யம்-2 படத்தை தியேட்டர்களில் வெளியிட ஆர்வம் காட்டி அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளாராம் சுதீர் வர்மா. அதேசமயம் விராட பர்வம் படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என்கிற முடிவுக்கும் வந்துள்ளாராம். தயாரிப்பாளர் இப்படி உல்டாவாக முடிவெடுத்துள்ளதால் வெங்கடேஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்க, ராணாவின் ரசிகர்களாக காற்றுப்போன பலூன் போல ஆகிவிட்டார்களாம்.