பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி |

வாரிசு நடிகைகள் பட்டியலில் கடந்த இரண்டு வருடங்களுக்குள் லேட்டஸ்டாக இணைந்தவர் நடிகை கல்யாணி. இயக்குனர் பிரியதர்ஷனின் மகளான இவர் சிவகார்த்திகேயனுடன் ஹீரோ, சிம்புவுடன் மாநாடு என மலையாளத்தை விட தமிழில்தான் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
அதேசமயம் மலையாளத்திலும் மரைக்கார், ஹிருதயம் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர் அடுத்ததாக ஒரு மலையாள படத்தில் டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்க உள்ளார். தள்ளுமால என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் காலித் ரகுமான் இயக்குகிறார். இவர் ஏற்கனவே மம்முட்டி நடித்த உண்ட என்கிற படத்தை இயக்கியவர். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது