நான் விஜய்யின் ரசிகை! - நடிகை குஷ்பு | சிவாஜி பெயரை நிச்சயம் காப்பாற்றுவேன் ! - சிவகார்த்திகேயன் | 'பார்க்கிங்' இயக்குனர் அடுத்த படம் குறித்து தகவல் இதோ! | மாளவிகா மோகனனின் தெலுங்கு அறிமுகம் தள்ளிப்போக காரணமாக இருந்த விஜய் தேவரகொண்டா! | 'டாக்சிக்' ஹீரோயின்கள், யாருடைய போஸ்டர் அசத்தல்? | 'ஜனநாயகன்' தணிக்கை தாமதம், நீதிமன்றத்தில் வழக்கு, இன்று மதியம் விசாரணை | பைரசிகளைத் தடுக்க தெலுங்கு பிலிம் சேம்பர், தெலுங்கானா போலீஸ் புதிய ஒப்பந்தம் | 'புஷ்பா 2' சாதனையை மிஞ்சப் போகும் 'துரந்தர்' | வீட்டு பூஜையில் அருள் வந்து ஆடிய சுதா சந்திரன் | அர்த்தமுள்ள கதைகளை தேடும் தீப்ஷிகா |

கடந்த சில வருடங்களுக்கு முன் தென்னிந்திய மொழிகளில் அனைத்திலும் வெளியாகி அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த படம் 'கேஜிஎப் - சாப்டர் 1'. இந்தப்படத்தை பிரமிக்க வைக்கும் வகையில் படமாக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல், அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி முடித்துவிட்டு தற்போது தெலுங்கில் பிரபாஸை வைத்து 'சலார்' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப்படத்தை முடித்த பின்னர் அவர் அடுத்ததாக ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். தசரா பண்டிகை தினமான நேற்று ஐதராபாத்தில் உள்ள சிரஞ்சீவியின் வீட்டுக்கு சென்ற இயக்குனர் பிரசாந்த் நீல் அங்கே சிரஞ்சீவியிடமும் ராம்சரணிடமும் கதை குறித்து விவாதித்துள்ளார். அப்போது அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார் பிரசாந்த் நீல். இந்தப்படத்தை டிவிவி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.