சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
படம் : ராம்
வெளியான ஆண்டு : 2005
நடிகர்கள் : ஜீவா, கஜாலா, சரண்யா, ரகுமான், முரளி
இயக்கம் : அமீர்
தயாரிப்பு : டீம் வொர்க் புரொடக் ஷன் ஹவுஸ்
மவுனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அமீர், தன் இரண்டாவது படமான ராம் வழியாக, சர்வதேச சினிமா கலைஞர்களின் கவனத்தைப் பெற்றார். நடிகர் ஜீவாவின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படமாவும், இது அமைந்தது. அமீர், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோருக்கு சர்வதேச விருதுகள் கிடைத்தன.
கொடைக்கானலில் வாழும் தாய், மகன் உறவைப்பற்றிய கதை தான், ராம். சரண்யா, ஜீவா அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சரண்யா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்க, அருகில் இருக்கும் ஜீவாவை, போலீசார் கைது செய்கின்றனர். தாயைக் கொன்ற மகன் என, வழக்கு செல்ல, திடீர் திருப்பமாக, போலீஸ்காரரின் மகன் கொலைகாரனாக இருக்கிறான். போலீசார் வழக்கு விசாரணையும், அது ஏற்படுத்தும் அதிர்வுகளும் தான், திரைக்கதை!
போலீசாராக நடித்திருக்கும் ரகுமான், முரளி ஆகியோர், தங்கள் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். ஜீவா கதாபாத்திரம், தனித்துவமிக்கதாக படைக்கப்பட்டிருந்தது. அதுவே அவர் செய்யும் காரியத்திற்கு நியாயம் கற்பிக்கிறது. இப்படத்திற்கு பின் சரண்யா, தாய் கதாபாத்திரங்களில் மின்னத் துவங்கினார்.
பிதாமகன் படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்ற கஞ்சா கருப்பு, இப்படத்தின் மூலம், காமெடியனாக தோன்றி, பிரபலமானார். ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்தை, புதிய பரிணாமத்தில் காட்டியது. படத்தின் இன்னொரு ஹீரோ, யுவன் சங்கர் ராஜாவின் இசை. மனிதன் சொல்கின்ற, ஆராரிராரோ... பாடல்கள் மனதிற்கு நெருக்கமாகின. இப்படம், சைப்ரஸ் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் திரையிடப்பட்டு, விருதுகளை பெற்றது. ஹிந்தியில், போலோ ராம்; கன்னடத்தில், ஹீச்சா - 2 என, ரீமேக் செய்யப்பட்டது.
புதிய முகம் காட்டினான், ராம்!