‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

படம் : திருப்பாச்சி
வெளியான ஆண்டு : 2005
நடிகர்கள் : விஜய், த்ரிஷா, மல்லிகா, கோட்டா சீனிவாச ராவ், பசுபதி
இயக்கம் : பேரரசு
தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ்
ஊர் பெயர்களில் படத்தின் தலைப்பு வைத்து, நம் கவனத்தை ஈர்த்தவர், இயக்குனர் பேரரசு. அவரின் முதல் படம், திருப்பாச்சி. 2005ம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியான இப்படம், 200 நாட்கள் ஓடி, பெரும் வெற்றியை பெற்றது. அண்ணன் - தங்கை சென்டிமென்டுடன், ஆக் ஷன் விருந்து படைத்தார், பேரரசு. இக்கதை, அஜித்தை மனதில் வைத்தே அவர் உருவாக்கியிருந்தாராம்.
திருப்பாச்சி அருகில் இருக்கும் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்; அரிவாள் தயாரிக்கும் தொழிலாளி. இவரின் தங்கை மல்லிகாவை, சென்னையில் வசிக்கும் நபருக்கு திருமணம் செய்து கொடுப்பார். ஆனால், சென்னையில் நடக்கும் ரவுடிசத்தால், தன் தங்கை பாதிக்கப்பட, வாயில் அரிவாளை கவ்வி, அனைத்து ரவுடிகளையும் தனி ஒருவனாக போட்டுத் தள்ளுகிறார். கதையில் ஒன்றும் இல்லை; திரைக்கதையில் தான் அசத்தியிருந்தார், பேரரசு.
கிராமத்து இளைஞர் கதாபாத்திரம், விஜய்க்கு பொருந்தி இருந்தது. அவரின் ஆக் ஷன் காட்சிகள், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. ஆட்டோகிராப் படத்தில் நடித்த மல்லிகாவிற்கு, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம்; சிறப்பாக செய்திருந்தார். கில்லி படத்தின் வெற்றியால், இப்படத்திலும் விஜய் - த்ரிஷா ஜோடி சேர்ந்தது. விஜயின் தங்கை மல்லிகா தான், படத்தின் நாயகி. த்ரிஷா, நான்கு பாடல்களுக்கு நடனம் மட்டும் ஆடி செல்வார்.
படத்தின் ஏழு பாடல்களையும், இயக்குனர் பேரரசு எழுத, கட்டுக் கட்டு... பாடலை தேவிஸ்ரீ பிரசாத்தும், கண்ணும் கண்ணும்... பாடலை மணி ஷர்மாவும், மற்ற பாடல்களுக்கு தீனாவும் இசையமைத்தனர். இப்படம் தெலுங்கில், அன்னவரம்; கன்னடத்தில் தங்கிகாகி என்ற பெயரில், ரீமேக் செய்யப்பட்டது.
திருப்பாச்சி அரிவாளை நன்கு தீட்டியிருந்தனர்!