கனிமொழிக்கும் எனக்குமிடையே 20 ஆண்டுகால நட்பு : சொல்கிறார் ஐஸ்வர்யா ரஜினி | திருப்பதி கோவிலில் ஜோதிகா வழிபாடு | 15 ஆண்டு காதலை உறுதிப்படுத்திய கீர்த்தி சுரேஷ் | மாரி செல்வராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | சிவகார்த்திகேயன் படம் : ஜெயம் ரவி போட்ட கண்டிஷன் | நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்த தனுஷ்: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | மலையாள சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு : சுஹாசினி திடீர் குற்றச்சாட்டு | நானும் கட்சி தொடங்குவேன் : பார்த்திபன் சொல்கிறார் | பிரபஞ்சத்துக்கே நான்தான் சூப்பர் ஸ்டார்: மிர்ச்சி சிவா கலகல | பிளாஷ்பேக்: ஜெயனுக்கு பதில் நடித்த ரஜினி |
படம் : அன்பே சிவம்
வெளியான ஆண்டு : 2003
நடிகர்கள் : கமல், மாதவன், கிரண், நாசர்
இயக்கம் : சுந்தர்.சி
தயாரிப்பு : லட்சுமி மூவி மேக்கர்ஸ்
முன் பின் தெரியாத ஒரு மனுஷனுக்காக கண்ணீர் விடுற, அந்த மனசு இருக்கே.. அது தான் கடவுள் என்றது, அன்பே சிவம்! மசாலா படங்கள், வசூலை கொடுக்கும்; ஆனால், காலம் கடந்து நிலைத்து நிற்காது. அன்பே சிவம் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியதால், இயக்குனராகவும், இணை தயாரிப்பாளராகவும் இருந்த சுந்தர்.சி பெரும் பாதிப்புக்கு உள்ளானார். அதன் பின், வழக்கமான மசாலா படங்களை கொடுத்து வருகிறார். ஆனாலும், இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் சுந்தர்.சியின் பெயர் சொல்லும் படம், அன்பே சிவம் தான்.
கம்யூ., கலைஞராக மீசையை முறுக்கும்போது, கமல் அவ்வளவு கம்பீரம். விபத்திற்கு பின், முகத்தில் தழும்புடன் அன்பை பரப்பும் போது, கமல் அவ்வளவு சாந்தம். கமல், தன் பெயரில் இருக்கும், சிவம் பிடிக்காத நல்லா. மாதவன், அன்பு பிடிக்காத ஏ.அர்ஸ். இந்த இருவரது பயணத்தில் துவங்குகிறது, அன்பே சிவம். படத்தை எத்தனை முறை பார்த்தாலும், புதிய எண்ணங்களை நமக்குள் தோற்றுவிக்கும். ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கியிருந்தார், கமல்.
இப்படத்தின் இரண்டாம் நாயகனாக, மாதவன். வெறுப்பை, கண்ணீரை தேவையான அளவில் வெளிப்படுத்தி இருந்தார். இக்கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர், அரவிந்த் சாமி.கிரண், நாசர், கம்யூ., தோழர்கள் என, படத்தில் இடம்பெற்ற அனைவரும், கதையை சுமந்திருந்தனர். இப்படத்தில், மதனின் வசனங்கள், ஹைலைட்டாக அமைந்தன.
தமிழகத்தை சுனாமி தாக்கும் முன், இப்படத்தில் இடம்பெற்ற சுனாமி பற்றிய வசனம் இடம்பெற்றிருக்கும். இது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வித்யாசாகர் இசையில், யார் யார் சிவம், ஏலே மச்சி, பூ வாசம், நாட்டுக்கொரு செய்தி... பாடல்கள் வெகு சிறப்பாக இருந்தன.
அன்பு தான் சார் கடவுள்!