அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்ட கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் | மகன் படத்தில் பாடுவாரா விஜய்? | திரையுலகில் 50வது ஆண்டு: பாரதரத்னா விருது பெறுவாரா இளையராஜா? | இந்தியிலும் கலக்கும் ரெஜினா | கையில் கட்டு ஏன்? சண்டையா? வரலட்சுமி விளக்கம் | சூர்யா 46வது படத்தில் விஜய் தேவரகொண்டா? | நாங்கள் ஒரு நல்ல படம் தயாரித்துள்ளோம் : சூரஜ் பஞ்சோலி | '3 பிஎச்கே' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! |
படம் : இயற்கை
வெளியான ஆண்டு : 2003
நடிகர்கள் : ஷாம், அருண் விஜய், குட்டி ராதிகா
இயக்கம் : எஸ்.பி.ஜனநாதன்
தயாரிப்பு : பிரிஸம் பிலிம்ஸ்
ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய, வெண்ணிற இரவுகள் என்ற கதையை தழுவி எடுக்கப்பட்ட படம், இயற்கை. கதாநாயகனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காதல் அரும்புவது குறித்து தான், தமிழ் சினிமா படமெடுத்து வந்தது. இப்படத்தில் நாயகி, இரு காதல்களுக்கு இடையே சிக்கி தவிப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
கப்பல், துறைமுகம், கலங்கரை விளக்கம் என்று புதியதொரு கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருந்தது. ராமேஸ்வரம் துறைமுகத்திற்கு அருகில் வசிக்கும் நான்சியை, கப்பல் பயணம் மேற்கொள்ளும் மாலுமி மருது காதலிப்பார். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன், மற்றொரு கப்பலின் கேப்டனான அருண் விஜயை, நான்சி காதலித்து வருகிறார். அருண் விஜயின் வருகைக்காக, நான்சி காத்திருப்பார். அருண் விஜயின் வருகை குறித்து ஏதும் தெரியாத நிலையில், மெல்ல மருதுவின் காதலில் விழுவார், நான்சி. கிறிஸ்துமஸ் அன்று தன் காதலை, மருதுவிடம் சொல்ல நான்சி திட்டமிடுவார். அன்றைய தினம், அருண் விஜய் வருவார். நான்சி என்ன முடிவெடுத்தார் என்பது தான், படத்தின் க்ளைமேக்ஸ்.
மருதுவாக, ஷாம்; நான்சியாக குட்டி ராதிகா நடித்திருப்பர். அருண் விஜயின் சிறப்பு தோற்றம், பாராட்டும் விதத்தில் அமைந்திருந்தது. படத்தின் இறுதி காட்சியில் வசனங்களே இல்லாமல், பாடல் மற்றும் பின்னணி இசையால், உணர்வுகளை கடத்தியிருந்தார், வித்யாசாகர். பழைய குரல், இயற்கை தாயே, காதல் வந்தால், அலையே... பாடல்களும் தமிழர்களை தாலாட்டியது.
விமர்சகர்களால் பாராட்டப்பட்ட இயற்கை, வசூலிலும் குறை வைக்கவில்லை. இப்படத்தின் வாயிலாக, எஸ்.பி.ஜனநாதன் என்ற தரமான இயக்குனர், தமிழ் சினிமாவிற்கு கிடைத்தார். இப்படம், தேசிய அளவிலான தமிழ் திரைப்படத்திற்கான விருது பெற்றது.
இயற்கை ஏதோ மாயம் செய்யும்... உணருங்கள்!